அமெரிக்காவிடம் சரணடைந்த சீனா!? பைசர் தடுப்பூசி இறக்குமதி!

by Editor News

சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க தடுப்பூசிகளை வாங்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாக உலகம் முழுவதும் கொரோனா குறைந்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சீனாவில் ஏற்கனவே நடந்த போராட்டத்தால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்த முடியாமல் பகுதியளவு கட்டுப்பாடுகளை விதித்து சீனா சமாளித்து வருகிறது.

அதேசமயம் கொரோனாவுக்கு எதிராக சீனா பயன்படுத்தும் சினோவேக் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக குறைவாகவே செயல்படுகின்றன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் அமெரிக்காவின் பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளை வாங்க சீனா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின்போதும் வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்குவதை சீனா தவிர்த்தே வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கு பின் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment