பொங்கலுக்கு சிறப்பு ரயில்! எங்கே? எப்போது? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

by Editor News

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தற்போது ஜனவரி மாதம் நெருங்கி வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் புக்கிங் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். ரயில்களிலும் ஏராளமான புக்கிங் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 16ம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 10.30க்கு புறப்பரும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். அதேபோல் ஜனவரி 17ம் தேதி இரவு 10.30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நெல்லை வரை செல்லும். இதற்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Related Posts

Leave a Comment