கடந்த 3 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. பரவல் அதிகரித்து வருவதற்கு ஏற்ப பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. இதன்காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்தவகையில் இந்தியாவில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களில் 3,994 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் முக்கிய மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.