சுவையான வெண்டைக்காய் பொரியல் …!

by Editor News

வெண்டைக்காயை சாப்பிடுவதால் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும். பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது ஏற்படும் வலியை குறைக்கும் திரவத்தை சுரக்க வைக்கும். இத்தகைய பல நன்மைகளை கொட்டின வெண்டைக்காயில் பொரியல் செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 5,
பொட்டுக்கடலை – 5 ஸ்பூன்,
மிளகு, சீரகம் – சிறிதளவு,
கொத்தமல்லி – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – ஒரு ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1/4 கிலோ வெண்டைக்காயை எடுத்து தண்ணீரில் நன்றாக அலசி விட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின் கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை போட்டு கடுகு வெடித்தவுடன் வெண்டைக்காயை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.

இவை வதங்கியதும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பின் மிக்ஸி ஜாரில் 5 ஸ்பூன் பொட்டுக்கடலை, 3 காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், அரை ஸ்பூன், கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, சின்ன வெங்காயம் 5, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வெண்டைக்காயில் இந்த மசாலா பவுடரை கொட்டி நன்றாக கிளறவும். 2 இரண்டு நிமிடம் வரை கிளறியதும் இறக்கினால், உதிரி உதிரியான பிசுபிசுப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

Related Posts

Leave a Comment