“தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ்தான் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி …!

by Editor News

கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழிருந்து வருகிறது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51 ஆக உள்ளது. மாதிரிகள் பகுப்பாய்வு செய்யும் வசதி தமிழகத்திலேயே உள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 691 ஆக உள்ளது. இதில் கொரோனா படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 471. ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் 68,624. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 37 ஆயிரத்து 526. தீவிர சிகிச்சை படுக்கைகள் 8321 ஆக உள்ளது. இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒட்டுமொத்த படுக்கை விவரங்கள் ஆகும். அரசு மருத்துவமனையில் மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 360 ஆக உள்ளது என்றார்.

Related Posts

Leave a Comment