4 சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு.
சீனா, ஹாங்காங், பாங்காக் (தாய்லாந்து), ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சீனாவும் இன்னும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அறிவித்த நேரத்தில் இந்த அறிவிப்பு வந்தது. முன்னதாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா சோதனைகள் செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்திருந்தார்.
கோவிட்-19 தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்டவைகளை உறுதி செய்வது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம் நடத்தினார்.முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தோம் என என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.