அசிங்கப்படுத்தியதற்கு சவால் விட்டதால் அதிர்ந்த வில்லன் அப்பா !

by Editor News

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனாவின் தங்கை நிச்சயதார்த்தத்திற்காக மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் அங்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மீனாவின் அப்பா மிக மோசமாக அசிங்கப்படுத்துகிறார்.

அவர்கள் எல்லோரையும் மீனா சாப்பிட உட்காரவைத்துவிட்டு சென்றுவிடுகிறார். அப்போது அங்கு வரும் மீனாவின் அப்பா அவர்களை அசிங்கப்படுத்தி பேச, அவர்கள் கோபத்தில் எழுந்து சென்றுவிடுகிறார்கள்.

இந்த விஷயம் பற்றி அதற்கு பிறகு அங்கு வந்த மீனாவிடம் சொல்கிறார்கள். அதை கேட்டு கொந்தளிக்கும் மீனா நேராக அப்பாவிடம் சென்று சண்டை போடுகிறார்.

“அந்த குடும்பம் உங்களை என்ன செய்தது. நீங்கள் அவர்களை அசிங்கப்படுத்தல.. என்னை அசிங்கப்படுத்தி இருக்கீங்க. இவ (தங்கை) திருமணத்திற்குள் அவங்ககிட்ட நீங்க கெஞ்சிட்டு நிப்பீங்க. அந்த நாள் வரும் பாருங்க” என சவால்விட்டு செல்கிறார்.

இதை கேட்டு வில்லன் அப்பா கடும் அதிர்ச்சியாகி நிற்கிறார்.

Related Posts

Leave a Comment