பூசணி விதையில் ஏராளமான நன்மைகள் !!

by Editor News

பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன.

பூசணி விதையில் உள்ள ஜிங்க் சத்து ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். பூசணி விதையில் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதால் இது தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

பூசணி விதையில் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு தேவையான எனர்ஜியை தருகிறது. மேலும் உடலின் மெட்டபாலிசத்தையும் தூண்டுகிறது.

பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

Related Posts

Leave a Comment