அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

by Editor News

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் நேற்று இரவு முதல், இன்று அதிகாலை வரை சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது: “ இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நெல்லை ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக பூவிருந்தவல்லியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் மற்றும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment