‘பாரதிகண்ணம்மா’ சீரியலில் பல வருடங்களா அரைத்தமாவையே அரைத்து, தற்போது தான் கதை சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒருவழியாக ஹேமா, லெட்சுமி இருவரும் தனது குழந்தைகள்தான் என தெரிந்து கொண்ட பாரதி, ஒன்றாக வாழலாம் என கண்ணம்மாவை அழைக்க, போடா……என சொல்லாத குறையாக கண்ணம்மா தனது குழந்தைகள், அப்பாவுடன் சொந்த ஊருக்கு செல்கிறாள்.
அங்கு சென்றும் பாரதி விட்டாமல் பிதொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார், இதுதான் தற்போதைய கதை நிலவரம். அப்போ கண்ணம்மா கெஞ்சினார், இப்போ பாரதியா? என ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதுக்கு ஒரு எண்டு கார்டே இல்லையா என புலம்பி தீர்க்கின்றனர் சீரியல் பிரியர்கள். நிலைமை இப்படி இருக்க பாரதி கண்ணம்மா சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட கேக் கட்டிங் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது இந்த வீடியோவில் , பாரதிகண்னாம்மா சீரியல் ஆயிரம் எப்பிசோடுகளை எட்டிவிட்டதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.