இன்று முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி நான்காம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் மட்டும் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 24 ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.