கிறிஸ்மஸ் ஸ்பெஷல் – தேங்காய் ரவா கேக் செய்வது எப்படி ?

by Editor News

நன்றாக கொதித்த பாலில் சர்க்கரை, கொக்கா பவுடர் உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்யப்படும் ரவா கேக் நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். வரப்போகும் கிறிஸ்துமஸிற்கு இதை கண்டிப்பா செஞ்சு பாருங்க.!

ன்றாக கொதித்த பாலில் சர்க்கரை, கொக்கா பவுடர் உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்யப்படும் ரவா கேக் நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். துண்டு, துண்டுகளாக சீவப்பட்ட தேங்காய் துருவலை கேக் மீது அலங்காரம் செய்தால், பார்ப்பதற்கு அதன் காட்சி இன்னும் அழகானதாக தோன்றும்.

ஒருவேளையில் தேங்காய் கேக்கின் சுவையை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், பாலுக்குப் பதிலாக பாதாம், முந்திரி, திராட்சை, வால்நட், சோக்கோ சிப்ஸ் போன்ற கலவையால் ஆன இனிப்புச் சுவை மிகுந்த பால் பயன்படுத்தலாம்.

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை சர்க்கரைக்குப் (சீனி) பதிலாக, இயற்கையாக கிடைக்கப் பெறும் நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் உள்ளிட்ட இதர இனிப்பூட்டிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதேனும் நிகழ்ச்சி கொண்டாட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள், ஆண்டு விழாக்கள், குழுவான சந்திப்புகள் போன்ற நிகழ்வுகளுக்காக இந்த கேக் தயார் செய்யலாம்.

ஆக, ஒவ்வொரின் மன விருப்பத்திற்கு உகந்ததாக இருக்கக் கூடிய தேங்காய் ரவை கேக் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேங்காய் ரவா கேக்கிற்கு தேவையான பொருட்கள் :

ஒன்றேகால் கப் அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும். 1 கப் அளவுக்கு செமோலினா எடுத்துக் கொள்ளுங்கள். இதேபோன்று கால் கப் அளவு கோகோ பவுடர், 1 ஸ்பூன் அளவு பேக்கிங் பவுடர், 6 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் தூள், அரை கப் அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், சுவையை கூட்டுவதற்கு அரை கப் சர்க்கரை, கால் கப் அளவு உப்பு சேர்க்காத வெண்ணெய், 1 டீ ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

கேக் தயாரிப்பது எப்படி?

முதலில் உலர்வாக இருக்கின்ற மூலப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கிக் கொள்ளவும். இதன் பிறகு இப்பு, கொக்கோ பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும்.

இப்போது பால், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும்.
அனைத்து மூலப்பொருட்களும் ஒன்றோடு ஒன்று கலந்து, நன்றாக இறுக்கம் ஆகும் வரையில் உருட்டிக் கொள்ளவும்.

இந்த கலவை எடுத்து, பேக்கிங் டின்னில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

துருவிய தேங்காயை கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். அதை ஏற்கனவே உள்ள கலவையுடன் சேர்த்து கலந்து, உலர்ந்த பிறகு சின்ன, சின பீஸ்களாக வெட்டி எடுக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment