பாம்பன் பாலத்தில் கோளாறு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாம்பன் பாலம் இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் ரயில் பாலமாகும். இது பெருநிலப்பரப்பையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாக உள்ளது. இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டுவருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.
இந்நிலையில் ராமநாதபுரம் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாம்பன் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலையால் ராமேஸ்வரம் மதுரை இடையே இன்று காலை 5:40 மணிக்கும், 6:30 மணிக்கும் புறப்பட வேண்டிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை – ராமேஸ்வரம், குமரி – ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.