பஞ்சாப் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து பள்ளி நேரம் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பள்ளி நேரம் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும் என்றும் முடியும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார்
டிசம்பர் 21 முதல் ஜனவரி 21 வரை பஞ்சாபில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் 8 மணி முதல் 3 மணி வரை பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 10 மணி முதல் 3 மணி வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.