சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா ..

by Editor News

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு அனுப்பும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் மூலம் கொரோனாவின வகைகளை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.

இதனை அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனா பரவுவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

Related Posts

Leave a Comment