மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு – இன்று தீர்ப்பு ..

by Editor News

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

2.66 கோடி நுகர்வோரில் 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதில் ஆன்லைன் மூலம் 51 லட்சம் பேரும், சிறப்பு முகாம்கள் மூலம் 53 லட்சம் பேரும் இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை பொறுத்து அவகாசம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இணைத்தாலும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதே சமயம் 100 யூனிட் இலவசமாக மின்சாரம் உள்ளிட்ட மின்சார துறையிடம் இருந்து மானியம் பெறும் அனைவரும் கட்டாயம் ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இணைக்க வேண்டும் என்றும் வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை நடக்கும். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதே சமயம் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்தால் தான் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .அப்படி இணைக்காதவர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தான் கட்டணத்தை செலுத்த முடியும். மின் இணைப்பு பெற்றிருப்பவர் இறந்திருந்தால் அவர் இறந்ததற்கான தக்க சான்றிதழ்களை சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்த பின்னர் மின் இணைப்பு என்னுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம்.

இந்த சூழலில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரான வழக்கறிஞர் எம்எல் ரவி வழக்கை தொடுத்துள்ள நிலையில் திட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நலத்திட்டங்கள் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் வாடிக்கை வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆதாரங்களை சிக்கல் ஏற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எனவே ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். அதேசமயம் ஆதார் இணைப்பு என்பது மீட்டருடன் செய்யப்படுவது தான்; வீட்டை காலி செய்யும்போது அது எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். நலத்திட்ட உதவிகளை எளிதாக இதன் மூலம் பெற முடியும். அனைத்து ஆய்வுகளையும் செய்து ஒப்புதல் பெற்ற பிறகு திடத்தை கொண்டு வந்துள்ளோம் என தமிழக அரசு சார்பில் விவாதம் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Related Posts

Leave a Comment