271
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த திருவிழா முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆட்ட நேர முடிவின் போது இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு இருந்ததால் சமநிலை அடைந்தது. இதனை அடுத்து சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் அர்ஜென்டினா அணி நான்கு கோல்களும் பிரான்ஸ் அணி இரண்டு கோல்களும் போட்டதால் உலக கோப்பையை அர்ஜென்டினா அணி தட்டி சென்றது. உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்வது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது .