கான்க்ரீட், தார் சாலைகளுக்கு மாற்று சாலை: சென்னை மாநகராட்சி திட்டம் ..

by Editor News

தமிழகத்தில் தற்போது கான்க்ரீட் மற்றும் தார் சாலைகள் போடப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கு மாற்றாக புதிய சாலையை போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சியில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் கான்கிரீட் சாலைகளுக்கு பதிலாக பேவர் பிளாக் என்ற சாலை போட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் கட்டமாக மணலி, ராயபுரம் வளசரவாக்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2.75 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 1.71 கோடி செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீரை அதிகரிக்கும் என்றும் சாலைகளில் நீர் தேங்காது என்றும் கூறப்படுகிறது .

Related Posts

Leave a Comment