சுரங்க பாதையானது இமயமலையின் ரம்பன் பகுதி, செனாப் நதியின் கிளைகளான ஹிங்கினி ,கோடா, குந்தன் நல்லா ஆகிய பகுதிகள் வழியாக செல்கிறது.
ஜம்மு- காஷ்மீரில் உள்ள உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பின் 111 கிமீ பாதையில் உள்ள பனிஹால்-கத்ரா பிரிவில் இந்திய ரயில்வே சமீபத்தில் நாட்டின் மிக நீண்ட சுரங்கப்பாதை ஒன்றை நிறைவு செய்தது .
சமீப காலமாக மலைப்பிரதேசங்களில் அதிக இயற்கை சீற்றங்கள், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் நிகழ்கின்றன. அதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை இப்போதுள்ள கட்டிட அமைப்புகளில் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் அடிப்படையில் ஜம்மு பகுதியில் ரயில் பயணிப்பவர்களை அவசர காலங்களில் எளிதாக மீட்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்க பாதையானது இமயமலையின் ரம்பன் பகுதி, செனாப் நதியின் கிளைகளான ஹிங்கினி ,கோடா, குந்தன் நல்லா ஆகிய பகுதிகள் வழியாக செல்கிறது. நதிகள்,மலை என்று பல்வேறு புவியியல் அமைப்புகள் வழியாக செல்வதால் சுரங்க பாதைக்கு துளையிடுவது மிகவும் சவாலான பணியாக இருந்துள்ளது.
அறிக்கையின்படி, இது பனிஹால்-கத்ரா வழித்தடத்தில் உள்ள நான்காவது சுரங்கப்பாதையாம். புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறை படி (NATM) வெடிப்பு மற்றும் துளையிடல் செயல்முறைகளின் நவீன நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ஜனவரியில், டி-49 எனப்படும் சுரங்கப்பாதை இங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
T-49 எனும் குதிரைக் காலணி வடிவிலான தப்பிக்கும் சுரங்கப்பாதை என்பது 12.75 கிமீ நீளமுள்ள பிரதான சுரங்க ரயில்பாதை மற்றும் 12.895 கிமீ எஸ்கேப் டன்னல் உட்பட 33 குறுக்கு வழிகளுடன் இணைக்கப்பட்ட இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாகும்.
உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பனிஹால்-கத்ரா பகுதி கட்டப்பட்டது . மொத்த 272 கி.மீ திட்டத்தில், 161 கி.மீ ஏற்கனவே இயக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.மீதம் உள்ள பணிகள் ஓரிரு ஆண்டுகளில் முழு பனி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஸ்மீர் பக்கம் சென்றால் இந்த சுரங்க பாதை எப்படி இருக்கிறது என்று பார்த்து வாருங்கள் மக்களே..