17ஆம் தேதி வரை மழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை அறிவிப்பு ..

by Editor News

டிசம்பர் 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்றும் மீனவர்கள் குறிப்பிட்ட ஒருசில பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 17ஆம் தேதி வரை மிதமான மழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டருக்கு மேல் காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Related Posts

Leave a Comment