அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது.
கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி இன்று பிறந்தது. இதனால் அதிகாலை முதல் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஐதீக நம்பிக்கை :
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும் என்பது நம்பிக்கை. அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார் என்பதும் நம்பிக்கை.
மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கடவுள் பக்தியில் ஈடுபட வேண்டிய காலமாக நம் முன்னோர்கள் மார்கழி மாதத்தை கொண்டிருந்தனர்.
மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படும் மாதம் மார்கழி மாதம். ஆஞ்சநேயர்மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது அல்லது கேட்பது, பஜனை பாடுதல் புண்ணியமாகும் என்று நனது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதனால்தான் இன்றும் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போடுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், பெருமாளை வணங்குதல் போன்ற அனைத்தும் செய்து வருகின்றனர்.