வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஷ் ஐயர் சத்தமில்லாமல் சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 404 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறிய நிலையில் ஸ்ரேயாஷ் – புஜாரா சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பலமான வீரராக ஸ்ரேயாஸ் உருவெடுத்து வருகிறார். முதல் டெஸ்டில் 90 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்தாண்டு இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பெருமையை அவர் கைப்பற்றியுள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே இந்திய அணி மிகவும் கவனிக்கப்பட்ட வீரராக சூர்யகுமார் யாதவ் இருந்து வந்தார். டி20 போட்டியில் அவர் காட்டிய அதிரடி, மிரட்டலான சதங்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். சூர்யகுமார் 43 இன்னிங்சில் 1424 ரன்கள் சேர்த்து இந்தாண்டு இந்திய அணியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை வைத்திருந்தார்.
ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் 38 இன்னிங்சில் 1489 ரன்கள் எடுத்து அவரது சாதனையை கைப்பற்றி உள்ளார். 3வது இடத்தில் விராட் கோலி 39 இன்னிங்ஸ்களில் 1,304 ரன்களும், 4வது இடத்தில் ரிஷப் பண்ட் 41 இன்னிங்ஸ்களில் 1,278 ரன்களையும் அடித்துள்ளனர்.