முட்டை சுக்கா ரெசிபி …

by Editor News

முட்டை சுக்கா ரெசிபி வெரைட்டி ரைஸ் வகைகளுக்கு நல்ல காம்பினேஷன். குறிப்பாக லஞ்சு பாக்ஸ் ரெசிபி லிஸ்ட்டில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 7

வெங்காயம் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 tsp

சோம்பு – 1/2 tsp

மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 3/4 tsp

தனியா பொடி – 1 tsp

மிளகு பொடி – 1/2 tsp

சோம்பு பொடி – 1 சிட்டிகை

கடுகு – 1/4 tsp

கறிவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

தேங்காய் – 2 சில்லு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடவும். பின் சோம்பு சேர்க்கவும்

அடுத்ததாக வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.

இப்போது பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறிவிடவும். பின் மீண்டும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி தூவி வேக வைத்த முட்டை மேல் மூன்று கோடுகள் போட்டு கிரேவியில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

இறுதியாக கொத்தமல்லி, சோம்பு பொடி மற்றும் கறிவேப்பிலை தூவி நன்கு கிளறவிட்டு இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் முட்டை சுக்கா தயார். இதை லெமன் சாதம், தேங்காய் சாதம், முட்டை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சமைக்கலாம். பொருத்தமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment