தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த 2002ஆம் ஆண்டு கன்னியாகுமரியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் 105 ரூபாய் ஊதியத்தில் பள்ளிக்கல்வித்துறை துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு இருந்த நிலையில் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இதனை அடுத்து லட்சுமணனுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி தமிழக அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்தார்.
ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வுதிய உரிமைகளை பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .