பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியான ராம் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி, தற்போது 63 நாட்களை எட்டி உள்ளது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏழு பேர் வெளியேறி உள்ளனர்.
கடந்த வாரம் குயின்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டதால் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராம் சம்பளம் குறித்த தகவல்தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் அதிகம் பங்கெடுக்காத மற்றும் விளையாட்டுகளை சுவாரசியம் இல்லாமல் விளையாடி வரும் போட்டியாளராக அறியப்படுபவர் ராம். இவர் மிகவும் அமைதியாக இருப்பதனால் என்னவோ, இவர் மற்ற போட்டியாளர்களை போல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது இல்லை.
மேலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் சர்ச்சையில் சிக்கிய ராம், ஒருவழியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். கிரிக்கெட் வீரரும், மாடலுமான ராமிற்கு பிக்பாஸ் தரப்பில் இருந்து ஒரு நாளைக்கு மட்டும் சம்பளமாக சுமார் 15000 இருந்து 20000 ரூபாய் வரை வழங்கப்பட்டது.
அப்படி பார்த்தால் ராமின் சம்பளம் 63 நாட்களுக்கு, குறைந்தபட்சம் 15 ஆயிரம் வைத்துக் கொண்டால் கூட 15 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் சும்மாவே இருந்த போட்டியாளருக்கு, இவ்வளவு சம்பளமாக என நெட்டிசன்களும் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.