தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வருகிற 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.