உலர் திராட்சையில் இத்தனை பயன்களா…!!

by Editor News

தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வெகுவாக உயரும். இதனால் ரத்தசோகை நோய் போன்றவை சரியாகும்.

உலர் திராட்சை பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்த்து, உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. உணவு சாப்பிட்ட பிறகு உணவு செரிமானத்தை எளிதாக்க சிறிதளவு உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. மேலும் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

உலர் திராட்சையில் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், அவை உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

உலர் திராட்சையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இவை கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை உதவுவதோடு, மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் காலை நேரத்தில் சிறிது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலை சுறுசுறுப்பாக இருக்கச்செய்யும். எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியமாக இருக்க உலர் திராட்சையினை சாப்பிட்டு வரலாம்.

Related Posts

Leave a Comment