குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். குரு பகவானுக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்கு உரியத் தினமாகும். அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் என்ற பட்டத்திற்குச் சொந்தமானவர் குருபகவான். இது போன்ற குரு பகவானின் பலன்களைப் பெறுவதற்கு சில விரதங்களை கடைப்பிடித்தால் குறிப்பாக வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் சில சிறப்பான மூலிகை கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம். வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு பகவானின் முழு நன்மைகளையும் பெற முடியும்.
அதன் மூலம் பல நன்மைகளும், சிறப்பான நன்மைகளும் உண்டாகும். ஒரு ஆண்டிற்கு 16 வளர்பிறை வியாழக்கிழமை விரதம் இருந்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். இந்த விரதத்தை 3 ஆண்டுகள் கடைப்பிடித்தால் குரு பகவானின் முழு அருளையும் பெற்று வாழ்க்கை முழுவதும் சிறப்பான செல்வங்களைப் பெறலாம். குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு நீர் எதையும் அருந்தாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் மேலும் சிறப்பாகும். குங்குமப்பூ கலந்த மாலை குரு பகவானுக்கு அபிஷேகம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். விரதம் இருக்கும் நாட்கள் முழுவதும் உணவருந்த அமைந்திருந்தால் நல்ல பலன்களைப் பெற முடியும். குரு பகவானுக்கு உகந்த ஸ்லோகங்கள், மந்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது. இரவு நேரத்தில் விரதத்தை முடித்துக் கொள்ள உப்பு சேர்க்காத உணவு குரு பகவானுக்குப் படைத்துவிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை வியாழக்கிழமை என்று முழுமையாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல யோகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண சிக்கல், குழந்தை இல்லாமை, தொழில், வியாபாரம் போன்ற சிக்கல்கள் நிவர்த்தியாகும். வாழ்வில் வளம் பெருகும்.