மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து விட்டதால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது.
வங்க கடலில் கடந்த ஐந்தாம் தேதி அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் மாறியது. பின்னர் நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
புயல் மையம் கொண்டிருந்ததால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட சில இடங்களில் மழை பெய்து வந்தது. குளிர் காற்றும் வீசி வந்தது. மாண்டஸ் புயல் இரவு 2:30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் 70 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது . இன்றைக்கு மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
புயல் கரையை கடந்த விட்டாலும் தமிழகத்தில் இன்றைக்கும் நாளைக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.