சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 270 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த புயல் மையம் கொண்டிருக்கிறது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
மாண்டஸ்புயல் அடுத்த மூணு மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மகாபலிபுரம் அருகே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது 65 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயலினால் அடுத்த மூணு மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கையினால் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புயல் வீசும் என்பதால் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்று தமிழக தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது. பொதுமக்கள் அவசர உதவி மற்றும் புகார்களை தெரிவிப்பதற்காக 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது சென்னை மாநகராட்சி.