குருவுக்கு விரதம் இருப்பதால் இவ்வளவு நன்மைகளா ..!

by Editor News

வியாழக்கிழமை குரு பகவானுக்கு விரதம் இருந்தால் முழு நன்மையையும் பெற முடியும் என்றும் குறிப்பாக வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை விரதம் இருக்க அதிகாலை எழுந்து குளித்து விட்டு மஞ்சள் உடைகளை அணிந்து எந்தவித உணவும் உண்ணாமல் நவக்கிரக சந்நிதிக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை வைத்து குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை குரு பகவானுக்கு அபிஷேகம் செய்தால் பெரும் நன்மை கிடைக்கும் என்றும் குரு பகவானுக்கு உகந்த சுலோகங்களை அன்றைய தினம் படிப்பது மிகவும் நல்லது என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

குருபகவானுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருமண சிக்கல் தொழில் வியாபாரத்தில் சிக்கல் மற்றும் குழந்தை இல்லாமை உள்பட பல்வேறு சிக்கல்கள் குரு பகவானுக்கு விரதம் இருந்தால் நீக்கிவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Related Posts

Leave a Comment