சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள் .. சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்தது …

by Editor News

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. குஜராத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை தக்கவைத்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,870 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,621 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.289.69 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.70 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 160.00 புள்ளிகள் உயர்ந்து 62,570.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 48.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,609.35 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment