துளசியின் ஆரோக்கிய நன்மைகள் …

by Editor News

துளசி ஒரு புனிதமான செடி. ஒவ்வொரு வீட்டினின் முற்றத்திலும் அழகுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் வைக்கப்படும் செடிகளில் மிகவும் முக்கியமானது. தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு நமக்கு உதவியாக உள்ளது. இதோடுஇதன் இலைகளைப் பயன்படுத்தி டீயாகவோ அல்லது அப்படியே சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்கின்றனர் நம்முடைய முன்னோர்கள். குறிப்பாக துளசியில் உள்ள சக்தி வாய்ந்த அடாப்டோஜெனிக் மறறும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து மனதிற்கு ஒரு தெளிவை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள ஆன்டி வைரஸ்கள் இருமல், சளி, மற்றும் வைரஸ் போன்ற பிற காய்ச்சலுக்குத் தீர்வு காண்கிறது.

இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் தான், துளசியை “ மூலிகைகளின் ராணி“ என்று அழைக்கின்றனர். இந்நிலையில் தான், நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி, துளசி பல விதமான மன அழுத்த சூழ்நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதோடு உளவியல் மற்றும் உடல் அழுத்தம் தொடர்புடைய நோய்களுக்கு ஏற்ப ஒருவரின் திறனை மேம்படுத்தும் மூலப்பொருளாகவும் உள்ளதாக கூறப்படும் நிலையில் என்னென்ன? பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்கிறது என இங்கே தெரிந்து கொள்வோம்.

துளசியின் ஆரோக்கிய நன்மைகள் :

கவலையைப் போக்குதல் :

நமக்கு ஏற்படும் பல்வேறு விதமான மன அழுத்தத்திற்கு ஏற்ப பல்வேறு நன்மைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது துளசி. அடாப்டோஜனாக செயல்படுவதால் பதட்டத்தைப் போக்கும் திறன் அதிகளவில் உள்ளது. ஆய்வின் படி, சகிப்புத்தன்மையை அதிகரிப்பது முதல் கவலையை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை துளசி கொண்டுள்ளது.

நல்ல தூக்கத்தைப் பெறுதல் :

துளசி ஆயுர்வேத மூலிகை என்பதால் உணவு சேர்த்துக் கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாக தூக்கமின்மை என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தூக்கமின்மைக்கு நாம் துளசியை உபயோகிக்கும் போது உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்த முடிகிறது. இதனால் எவ்வித இடையூறும் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடிகிறது என்கிறது ஆய்வுகள்.

மேம்பட்ட நினைவாற்றல் :

துளசி இலைகளுக்கு இயற்கையாகவே தூக்கமின்மை பிரச்சனைகளைச் சரிசெய்யக்கூடிய பண்புகள் உள்ளது போல் நம்முடைய நினைவாற்றல் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது என்கிறது ஆய்வுகள். குறிப்பாக யோகாசனங்களைப் போன்று உடலையும், மனதையும் அமைதிப்படுத்தும் செயல்களிலும் துளசி ஈடுபடுகிறது. எனவே துளசி இலைகளை நீங்கள் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக பயன்படுத்தும் போது, இதன் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அல்லது தேநீருடன் காய்ச்சி குடிக்கலாம். அல்லது அப்படியே மென்று சாப்பிட்டால் எவ்வித பிரச்சனைகளும் உடலுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இனி நீங்களும் உங்களுடைய உணவுப் பழக்க வழக்கத்தில் துளசியை சேர்த்துக் கொள்வதற்கு மறந்துவிடாதீர்கள்.

Related Posts

Leave a Comment