சமோசா சாட்…

by Editor News

தேவையான பொருட்கள்

சமோசா – 3
அப்பளம் – 4
தயிர் – 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா சட்னி – 2 தேக்கரண்டி
புளி சட்னி – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
ஓமப் பொடி – 1 கப்
உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும். அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும். தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். துண்டுகளாக உடைத்த சமோசாவை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நன்றாக கலந்த தயிரை ஊற்றவும். அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும். அடுத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும். கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும். இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

Related Posts

Leave a Comment