சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் மொபைல் செயலியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பெர்னாண்டோ விளக்கமளித்தார்.
2023 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.