ஃபிரிட்ஜ் டோரில் பால் வைக்கக் கூடாது ..! ஏன் தெரியுமா ..?

by Editor News

ஃபிரிட்ஜில் எல்லா இடமும் நிறைந்த பிறகு, மிச்சமீதி இடவசதி என்பது டோர்களில் தான் இருக்கும். ஆக, அங்கே தான் கூல்ட்ரிங்க்ஸ், பால் பாட்டில், தயிர் கப், மோர் பாக்கெட் போன்றவற்றை நாம் பதப்படுத்தி வைக்கிறோம். இத்தகைய சூழலில் டிக்டாக்கில் முன்வைக்கப்பட்ட அறிவுரை பலருக்கும் இதுகுறித்த குழப்பத்தை ஏற்படுத்தியது.

டிக் டாக், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக நமது வாழ்க்கை முறை, மொபைல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப அப்டேட்டுகள், சொத்து விஷயங்கள், சமையல் குறிப்புகள் என ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் கொட்டுகின்றன.இதில் நிறைய தவறான தகவல்களும், போலியான செய்திகளும் உண்டு என்றாலும், ஆதாரப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக சொல்லப்படுகின்ற தகவல்களும் நிறைய இருக்கின்றன. சில செய்திகள் மேலோட்டமாக உண்மை என்று தோன்றினாலும், நம் மனதில் நீடித்த குழப்பத்தை ஏற்படுத்திச் செல்லும்.

அந்த வகையில் டிக்டாக்கில் அண்மையில் வெளிவந்த பரிந்துரை ஒன்று குறித்து சமூக வலைதள பயனாளர்கள் சீரியஸாக விவாதித்து வருகின்றனர்.டிக் டாக்கில் ‘Cost of living crisis Tips’ என்ற பெயரில், விலைவாசி உயர்வுகளுக்கு மத்தியிலும் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்திச் செல்வது எப்படி என்பது குறித்து நிறைய ஆலோசனை வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சானலில், அண்மையில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோ ஒன்று தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதாவது, ஃபிரிட்ஜ் டோர்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது என்ற அறிவுரையை இவர்கள் முன்வைத்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்களுக்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஃபிரிட்ஜ் டோரில் பால் வைக்காமல் இருப்பதற்கும், பணத்தை சேமிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி தொடங்கிவிட்டனர்.அதே சமயம், ஃபிரிட்ஜில் பால் வைப்பதற்கு என்று ஃபிரீசருக்கு கீழே தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நம் வீடுகளில் பெரும்பாலும் யாரும் அதை கடைப்பிடிப்பது கிடையாது. ஃபிரிட்ஜ் நிறைய பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கிடைக்கும் இடத்தில் பால் மற்றும் இதர பானங்களை நாம் வைப்பது உண்டு.

அதுவும், ஃபிரிட்ஜில் எல்லா இடமும் நிறைந்த பிறகு, மிச்சமீதி இடவசதி என்பது டோர்களில் தான் இருக்கும். ஆக, அங்கே தான் கூல்ட்ரிங்க்ஸ், பால் பாட்டில், தயிர் கப், மோர் பாக்கெட் போன்றவற்றை நாம் பதப்படுத்தி வைக்கிறோம். இத்தகைய சூழலில் டிக்டாக்கில் முன்வைக்கப்பட்ட அறிவுரை பலருக்கும் இதுகுறித்த குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதிவை வெளியிட்ட சானலிடமே கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், “பால் எப்போதுமே ஒரே குளிர் நிலையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கெட்டுவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஃபிரிட்ஜ் டோரை திறந்து மூடும்போது, பாலை சுற்றியுள்ள குளிர்ந்த காற்று வெளியேறிவிடுகிறது’’ என்று விளக்கம் அளித்தனர்.

இந்தப் பதிலில் திருப்தி அடையாத பயனாளர் ஒருவர், “அதெப்படி, நான் ஃபிரிட்ஜ் திறப்பது 2 நொடிகள் அல்லது அதிகபட்சம் 10, 15 நொடிகள் தான். இதற்குள்ளாக என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும்’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவர்கள் மீண்டும் அளித்த பதிலில், “ஒரு நாளைக்கு எத்தனை முறை இப்படி திறந்து மூடுவீர்கள்? அப்படியானால் மொத்த நேரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment