செஸ்டர் நகர இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் சமந்தா டிக்சன் வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகு, தனது முதல் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். மறுபுறம் தொழிற்கட்சி அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
சமந்தா டிக்சன் 10,974 வாக்குகள் பெரும்பான்மையுடன் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
அவரது கட்சி கன்சர்வேடிவ்களிடமிருந்து 13.76 சதவீத வாக்குகளுடன் 61 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்டியன் மாதேசன், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, செஸ்டர் நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
2019இல் 6,164 பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அந்த இடத்தை தொழிற்கட்சி, முழுமையாகத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 38.3 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தொழிலாளர் கட்சி 49.6 சதவீதம் மற்றும் லிபரல் டெமாக்ராட்ஸ் 6.8 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த முறை, கன்சர்வேட்டிவ் வேட்பாளரும் தேசிய சுகாதார சேவையின் செவிலியருமான லிஸ் வார்ட்லாவை தோற்கடித்து, டிக்சன் 61.22 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.