அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டில் பதவியேற்று ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களில் அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சில கடிதங்கள் வந்துள்ளது. அந்த கடிதங்களில் ஒருவிதமான வெள்ளை தூள் இருந்ததால் பரபரப்பு எழுந்தது.
இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜார்ஜியாவை சேர்ந்த ட்ராவிஸ் பால் என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் ஜோ பைடன் மட்டுமல்லாமல் மேலும் பல அரசாங்க அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பலருக்கும் இதுபோன்ற மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 7,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 33 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.