விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது iQoo நியோ 7 SE ஸ்மார்ட்போன்

by Editor News

iQoo நியோ 7 SE ஸ்மார்ட்போன் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

iQoo சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2019ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் விவோ ஆகும். இந்தியாவில் தற்போது iQoo தனக்கென்று தனி அடையாளத்தை பிடித்துள்ளது.. iQoo செல்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் இந்த நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. iQoo செல்போன்களில் இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், ஐகூ நியோ 7 SE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஐகூ நியோ 7 SE ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ( இந்திய நேரப்படி நண்பகல் 12 மணி) அறிமுகம் செய்யப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஐகூ நியோ 7 SE ஸ்மார்ட்போனின் சிறப்பமசங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் full HD+ அமோல்டு தொடுதிரையை கொண்டுள்ளது. மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. அதாவது, Nemely Electric Blue, galaxy மற்றும் interstellar Black ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனிற்கு 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செக்கெண்டரி கேமரா என இரண்டு கேமராக்கலும், முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா என மொத்த மூன்று கேமராக்கல் உள்ளன. இந்த ஸ்மாட்போனில், மீடியாடெக் டிமென்சிட்டி 8200 SOC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment