மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் மோதின.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதேநேரத்தில் குறைந்த கோல்கள் வித்தியாசத்தால் போலந்தும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
போட்டி முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்வதை தவிர்க்கும் வகையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் ஓரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. அதன்படி சி பிரிவில் இடம் பெற்றிருந்த 4 அணிகளும் நள்ளிரவில் மோதின. அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் இடையேயான போட்டியில் 39வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை, அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி வீணடித்தார்.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 2-வது பாதி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் அலெக்சிக்ஸ் மேக் கோல் அடித்தார். தொடர்ந்து 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா 2க்கு 0 என வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 வெற்றிகளை பதிவு செய்த அர்ஜென்டினா கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா மெக்சிகோ அணிகள் மோதிய நிலையில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தில் மெக்சிகோ 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. எனினும் போராடிய சவுதி அரேபியா கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இப்போட்டியில் வென்ற போதும், மெக்சிகோவால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. குறைந்த கோல் வித்தியாசம் காரணமாக 4 புள்ளிகளை பெற்ற போலந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.