மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம் ..!

by Editor News

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கமளிக்கவுள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையிலே, இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி, உண்மைகளை வெளிப்படுத்தவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்திருப்பதன் மூலம் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உபகுழு நாடாளுமன்றத்தில் கூடியபோது இதுகுறித்து தெரியவந்துள்ளது.

மின்சார சபையின் தற்போதைய இழப்பை ஈடுகட்ட, மின் கட்டணத்தை 70 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment