நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் …

by Editor News

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் (புதன்கிழமை) தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதே வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

Related Posts

Leave a Comment