முதன்முறையாக மூக்கு வழி கொரோனா மருந்து ! – இந்தியாவில் அனுமதி !

by Editor News

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் இருந்து வருகின்றன. 2020ல் தொடங்கிய இந்த கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க தொடங்கின.

அவ்வாறாக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பு மருந்தை ஊசிகள் மூலமாக மட்டுமல்லாமல் இன்ஹெலர் முறையிலும் கண்டுபிடிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தன.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் வகையில் இன்கோவாக் (incovacc) என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக மூக்குவழி கொரோனா மருந்துக்கு அனுமதி இப்போதுதான் அளிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment