இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்,
கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் புதுப்பிப்பை வழங்கியதில் இருந்து எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்தார்.
சமீபத்திய பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம், ஒக்டோபர் மாதத்தில் 18 புதிய டிப்தீரியா நோயாளிகளையும், இந்த மாதத்தில் இதுவரை 27 பேரையும் அடையாளம் கண்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி முதல் மொத்தம் 50 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கடந்த பெப்ரவரி ஜூன், ஜூலை, ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா ஒரு தொற்று இருந்தது.
புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே, அவர்கள் பிறந்த நாட்டிலோ அல்லது ஐரோப்பா வழியாகச் செல்லும் பயணத்திலோ பல்வேறு புகலிட வசதிகளில் இருந்த தொற்றுகளை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம், கண்டறிந்ததாக குடிவரவு அமைச்சர் கூறினார் .