தமிழகத்தில் அடுத்த இரண்டு மணிக்கு மேல் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ராமநாதபுரம், விருதுநகர், ஈரோடு, நீலகிரி, நெல்லை, தென்காசி, கோவை, தூத்துக்குடி, தேனி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது.
கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையினால் தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.