275
தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை – ½ கப்
இட்லி அரிசி – 1 கப்
உளுந்து – ¼ கப்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாவுக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும். இப்போது தூதுவளை தோசை மாவு தயார். புளித்த பின் தோசையாகச் சுட்டு சாப்பிடலாம்.