இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி – முதலமைச்சர் இரங்கல்

by Editor News

இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி தங்கவேலு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த விவசாயி தங்கவேல்(85), நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைபாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். திமுக மீது மிகுந்த பற்று கொண்ட தங்கவேல், கட்சி தொடங்கியது முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை இந்தி திணிப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்த அவர், தான் எடுத்து வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றும் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விவசாயி தங்கவேலின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment