பிஷப் ஆக்லாந்தின் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரான டெஹென்னா டேவிசன், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
29 வயதான அவர் கடந்த 2019ஆம் ஆண்டு கவுண்டி டர்ஹாம் தொகுதியின் முதல் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, அமைச்சர் டேவிசன் இந்த வாரம் வெளியேறுவதாக அறிவித்த நான்காவது கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அரசியலுக்கு வெளியே முக்கியமாக எனது குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதாக டேவிசன், கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நான் எனது பெரும்பாலான நேரத்தை அரசியலுக்காக அர்ப்பணித்துள்ளேன், மேலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறேன்’ என கூறினார்.
மூன்று வெவ்வேறு பிரதமர்களைக் கண்ட ஒரு வருடத்தில் கன்சர்வேடிவ்கள் தொழிற்கட்சிக்கு பின் தங்கியிருப்பதால் டெஹென்னா டேவிசனின் இந்த முடிவு வந்துள்ளது.