எஸ்.எஸ்.சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென மதுரை மாவட்ட எம்.பி சு.வெங்கசேடன் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.
2011 இல் Scientific Assistant in IMD Examinations வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017 இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர். கடந்த காலங்களில் இந்த தேர்வுகளில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. 2022 இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன. ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டுமென ஸ்டாப் செலக்சன் கமிசன் மற்றும் இந்திய வானியல் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்