அழகான முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பது என்பது சகஜம் என்றாலும், இதனால் தன்னுடைய அழகு கெட்டுவிட்டதே என்ற மனக்கவலை பெரும்பாலானோருக்கு இருக்கும். அதுவும் டீன் ஏஜ் வயதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் முகப்பருகள் அதிகளவில் வரக்கூடும். இதை வரவிடாமல் தடுக்கிறோம் என லேசாக கிள்ளி விட்டாலே முகத்தில் குழி போன்ற கரும்புள்ளிகள் ஏற்பட்டுவிடும். இதோடு பல ஆண்டுகளுக்கு இந்த கரும்புள்ளிகள் குறையாமலே இருக்கும். எனவே முகப்பருக்கள் வந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே சில சிகிச்சைகளை நீங்கள் மேற்கொண்டாலே எந்த கரும்புள்ளிகளையும் தடுக்க முடியும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.
கரும்புள்ளிகளை மறைக்க செய்ய வேண்டியவை: முதலில் சருமப் பராமரிப்பு என்று வரும் போது, உங்களது சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருட்களை தோல் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உபயோகிக்க வேண்டும். அதிலும் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளதாக என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனையடுத்து பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை மறைப்பதற்கு மாலையில் 2 மணி நேரம் முகப்பரு புள்ளிகள் மீது ஸ்பாட் சிகிச்சையாக அஸெலிக் அமிலம் அல்லது ட்ரெட்டினோயின் ஜெல்லைப் பயன்படுத்த வேண்டும்.பின்னர் கிளைகோலிக் அல்லது சாலிசிலிக்அமில சீரம்களுடன், நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும்.
வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே நாம் எதையும் கண்டுக்கொள்வதில்லை. பிரச்சனை ஏற்படும் போதும் தான் என்ன செய்யலாம்? என யோசிப்போம். இதுபோன்று முகப்பருக்கள் ஏற்படும் போது அலட்சியமாக விட்டு விடுவதால் நமது சருமத்தில் மாறாத வடுக்களாக உருவாகிறது. எனவே ஆரம்பத்தில் இருந்தே முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும். எப்போதும் உங்களது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முயல வேண்டும்.
சன்ஸ்கிரீன் உபயோகித்தல் : பொதுவாக சருமத்துளைகள் அடைக்கும் போது முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. எனவே வெளியில் செல்லும் போது சரும பராமரிப்பிற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டதோடு உங்களது சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யலாம். இது முகத்தில் தேவையற்ற மாசுக்கள் படிவதை தவிர்ப்பதோடு, முகப்பரு பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதை மட்டும் நீங்கள் பயன்படுத்தினால் போதும், கூடுதல் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தத் தேவையில்லை. இதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உதவியாக இருக்கும்.
முகப்பருக்கள் என்பது சரிசெய்யக்கூடிய சரும பிரச்சனைகளில் ஒன்று தான். இருந்தப்போதும் ஆரம்ப கட்டத்தில் இருந்தே சரி செய்தால் நிச்சயம் தீர்வு காண முடியும். எனவே பருக்கள் முகத்தில் தோன்றினாலே காயங்களைக் குணப்படுத்தும் சிலிக்கான் ஜெல்லைப் பயன்படுத்தாலம். இது முகத்தில் ஏற்பட்டுள்ள வடுக்களை மென்மையாக்க உதவுகிறது. ஆனால் இதை குறைவான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது முகத்தில் ஏற்படும் குழிகள் மற்றும் புண்களைத் தவிர்க்க உதவியாக உள்ளது.
சிலிக்கான் பயன்படுத்துதல் : முகப்பருக்கள் என்பது சரிசெய்யக்கூடிய சரும பிரச்சனைகளில் ஒன்று தான். இருந்தப்போதும் ஆரம்ப கட்டத்தில் இருந்தே சரி செய்தால் நிச்சயம் தீர்வு காண முடியும். எனவே பருக்கள் முகத்தில் தோன்றினாலே காயங்களைக் குணப்படுத்தும் சிலிக்கான் ஜெல்லைப் பயன்படுத்தாலம். இது முகத்தில் ஏற்பட்டுள்ள வடுக்களை மென்மையாக்க உதவுகிறது. ஆனால் இதை குறைவான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது முகத்தில் ஏற்படும் குழிகள் மற்றும் புண்களைத் தவிர்க்க உதவியாக உள்ளது.
இதோடு மஞ்சள், சந்தனம், கற்றாழை, பாசிப்பருப்பு போன்ற இயற்கையான அழகுச்சாதனப் பொருள்களை பயன்படுத்தியும் நீங்கள் முகப்பரு பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். ஆனால் இதை முறையாக கவனிக்க தவறினால் நிச்சயம் முகத்தில் நீங்காத வடுக்களாக முகப்பருக்கள் அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவேஎச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.